#BREAKING : கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு..!
கர்நாடகாவின் வெவ்வேறு நகரங்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மக்கள், கல்வி, தொழில், வேலை என, பல நோக்கங்களுக்காக பெங்களூரில் அடைக்கலம் பெறுகின்றனர். உலகின் கவனத்தை தன் வசம் திருப்பும் நகரங்களில் பெங்களூரும் ஒன்று.
ஒரு காலத்தில் பெங்களூரை, 'ஏரிகளின் நகர்' என அழைத்தனர். அதன்பின் பூங்கா நகராக வளர்ந்தது.
இன்று நாட்டின், 'சிலிகான் வேலி', 'ஐ.டி., சிட்டி' என பிரசித்தி பெற்றது. கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, அகலமான சாலைகள் இருந்தன. பெரிய, பெரிய கட்டடங்கள் இல்லை. ஆனால் நாளடைவில் சூழ்நிலை மாறியுள்ளது.சமீப ஆண்டுகளாக, நகரில் விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான கட்டடங்கள் அதிகரிக்கின்றன. வெளி மாவட்டங்கள், மாநிலங்களின் மக்கள் பிழைப்பு தேடி வந்து, பெங்களூரில் குடியேறுகின்றனர். இவர்கள் வசிக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்நிலையில் பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்தது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
#Watch | பெங்களுருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த காட்சி.
— Sun News (@sunnewstamil) October 22, 2024
இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.#SunNews | #Bengaluru | #CCTV pic.twitter.com/UuP2zuZnBr
.png)