1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திமுகவில் இணைகிறார் அன்வர் ராஜா..!

Q

அ.தி.மு.க.,வின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா, 2021 ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணையலாம் என பழனிசாமி அறிவித்திருந்தார்.இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு அன்வர் ராஜா, பழனிசாமியை சந்தித்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்தது முதல் அவர் அக்கட்சியின் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சென்னை அண்ணா அறிவாலாயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அன்வார் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று அன்வர் ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அன்வர் ராஜா மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Trending News

Latest News

You May Like