#BREAKING : அண்ணாமலைக்கு பாஜகவில் புதிய பொறுப்பு..!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். தற்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதற்காக அண்ணாமலையிடம் இருந்து கட்சி தலைவர் பதவியை பாஜக மேலிடம் பறித்துள்ளது.
குறிப்பாக அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என்று அதிமுக தலைவர்கள் கூறியதாகவும், அதன்படியே அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அண்ணாமலைக்கு மாற்றாக தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட உள்ளார்.
இருப்பினும் தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு என்பது வழங்கப்பட உள்ளது. இதனை நேற்றைய பிரஸ்மீட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், பாஜகவில் அண்ணமாலைக்கு புதிய பொறுப்பு வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழுவில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழிசை, சரத்குமார், தமிழிசை, எச்.ராஜா, ராம சீனிவாசன், கரு.நாகராஜன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் எல்.முருகன், வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.