#BREAKING : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் காலமானார்..!
சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவுக்கு (72) உடல்நிலை சரியில்லாததால், 3 நாள்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதயம், சுவாசக் கோளாறு பிரச்னை இருந்ததாகவும், அதனால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 16) ராமமூர்த்தி நாயுடுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவர் 1994 1999 வரை சந்திரகிரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். மேலும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.