1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அன்புமணி ராமதாஸ் கைது..!

1

கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்கான பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கியது. சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகின்றனர். 

இந்நிலையில் என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி.க்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் புறப்பட்டனர். என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் உருவானது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர். அன்புமணியை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை மறித்து பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மீது பாமகவினர் கல் வீசினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.

Trending News

Latest News

You May Like