#BREAKING : 2.88 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை..!

காந்திநகர், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் ஆகிய மூன்று இடங்கள் முக்கியமானதாகவும் அதிகம் பேசப்படும் இடங்களாகவும் கருதப்படுகின்றன. காந்திநகரில் இருந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனல் படேலை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
எல்.கே.அத்வானி, வாஜ்பாய் வெற்றிபெற்ற தொகதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 3,70,199 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். இந்த நிலையில், 2.88 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அமித் ஷா முன்னிலை பெற்றுள்ளார். அதேசமயம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சோனல் படேல் 81,729 ஆயிரம் வாக்குகள் பெற்று பின்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .