#BREAKING : பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குகிறேன் - நடிகர் அல்லு அர்ஜுன்..!
உலகம் முழுவதும் 12,000 திரையரங்குகளில் புஷ்பா 2 திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அர்ஜுன் உள்ளிட்ட படக் குழுவினர் ரசிகர்களுடன் ரசித்தனர். இந்த சிறப்புக் காட்சிக்காக இரவு முதலே சந்தியா திரையரங்கில் பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடியிருந்தனர்.
குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என பலரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடியும் நடத்தினர். அப்போது ரசிகர்கள் சிதறி ஓடிய நிலையில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், மொகடம்பள்ளியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி ரேவதி. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் புஷ்பா 2 படம் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது, திடீரென அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவினர் அங்கு வந்துள்ளனர். அப்போது, அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்துள்ளார். அவரது மகன் ஸ்ரீதேஜ் கூட பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மற்றும் படக்குழுவின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலங்கானாவில் இனி எந்தவொரு படத்துக்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படாது என அம்மாநில உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த துயர சம்பவம் குறித்து பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்;அதனால், கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை
ரேவதியின் குடும்பத்திற்கு எனது சார்பில் ரூ.25 லட்சம் வழங்குவேன்; எங்கள் குழுவினரிடம் இருந்து எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
Deeply heartbroken by the tragic incident at Sandhya Theatre. My heartfelt condolences go out to the grieving family during this unimaginably difficult time. I want to assure them they are not alone in this pain and will meet the family personally. While respecting their need for… pic.twitter.com/g3CSQftucz
— Allu Arjun (@alluarjun) December 6, 2024