#BREAKING : ஏர்டெல் நெட்வொர்க் சேவை முடங்கியது..!
இந்தியாவின் பல பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் சேவை செயலிழப்பை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்று, ஏர்டெல். நாடு முழுதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் சேவையை ப யன்படுத்துகின்றனர். அது மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் இணையதள சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 'ஏர்டெல் மொபைல் போன்' மற்றும் இணையதள சேவை நேற்று திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்தனர்.
இன்று (ஆகஸ்ட்.24) காலை 10 மணி முதல் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.