1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாளை அதிகாலை 4 மணி வரை விமான நிலையம் மூடல்..!

Q

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இடை இடையே மழை விட்டாலும், தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. விமான நிலைய ஓடு பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானங்கள் இயங்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாளை அதிகாலை வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விமானங்களை இயக்க முடியாத சூழல் உள்ளதன் காரணமாக நாளை அதிகாலை 4 மணி வரை விமான நிலையம் மூடல்

Trending News

Latest News

You May Like