1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்டி குமார் ராஜினாமா..!

1

கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே இபிஎஸ் வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like