#BREAKING : மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.! திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

ஓடும் ரயிலில் மீண்டுமொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே தூத்துக்குடி- ஈரோடு செல்லும் ரயிலில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 26 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். கொடைரோடு அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, மதுபோதையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மதுபோதையில் இருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.