#BREAKING : பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து இவர்களைச் சிறைக்காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்தநிலையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் இந்தப் படுகொலை தொடர்பாக வழக்கறிஞர்கள் மலர்க்கொடி சேகர், ஹரிஹரன், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த ஆற்காடு சுரேஷின் மனைவியும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை சில நாட்கள் முன்னதாக ஓட்டேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சில தினங்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை மாநிலத் தலைவராக நியமிக்கும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அக்கட்சியின் மாவட்டத் தலைவர் இளையராஜா தெரிவித்திருந்தார்
இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 22, 2024
பகுஜன் சமாஜ் கட்சியின்
தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு #BSP #BSPnewleader #Anandhan #News18tamilnadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/XqPV3lWIAL