1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: பிதாமகன் திரைப்படத்தில் லைலாவின் அப்பாவாக நடித்தி நடிகர் விஷ்வேஸ்வர ராவ் காலமானார்..!

1

நடிகர் விஷ்வேஸ்வர ராவ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதிலும் விஸ்வேஷ்வர ராவ் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிகை லைலாவின் அப்பாவாக நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இவர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62. இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர். 'பிதாமகன்' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

விஷ்வேஸ்வர ரா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கேரக்டராகவும், குணசித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அவர் ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டாராம். அதிலும் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 150 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like