1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் பாலியல் புகாரில் கைது..!

Q

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

அவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில், நவம்பரில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:.

சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ், 32 என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார்.

தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்..

திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது பற்றி கேட்ட போது என்னை மிரட்டினார்.வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று  ராஜேஸ் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில், ராஜேஷை அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like