#BREAKING : படப்பிடிப்பில் விபத்து : நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்..!
சூர்யா 44 படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் அந்தமானில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்ட சூட்டிங் ஊட்டியில் துவங்கப்பட்டு தொடர்ந்து மும்முரமாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படத்தின் சூட்டிங் தடைபட்டுள்ளது.
காதல் மற்றும் ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் சூர்யா 44 படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெட்டே இடையிலான ரொமான்டிக் காட்சிகள் ஊட்டியில் படமாக்கப் பட்டதாக கூறப்பட்டது. இந்த மாதம் 15ம் தேதி வரை இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் ஆக்சன் காட்சி ஒன்றின் ஷூட்டிங்கின்போது சூர்யாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாக படக்குழு சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டு சூர்யாவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சில தினங்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் சில தினங்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.