1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்..!

1

பிரபல நடிகர் ரோபாே சங்கர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் எடை மெலிந்த இவர் சில மாதங்களாகத்தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், திடீரென மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக அவரை சென்னை-பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவனையில் அனுமதித்தனர்.

ஆரம்பத்தில் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்டது. இதனால்தான் மயக்கம் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அதைத்தாண்டி அவர் மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிது.

நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

Trending News

Latest News

You May Like