1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நடிகர் முகேஷுக்கு ஜாமீன்..!

1

மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மலையாள நடிகர்கள் சித்திக், இடவேள பாபு, கொல்லம் எம்.எல்.ஏ., முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், நடிகரும் கொல்லம் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முன்ஜாமின் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், வியாழன் அன்று தீர்ப்பு வழங்குவதாக கூறி கேரளா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதே போன்று, எடவேலு பாபு தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது எர்ணாகுளம் முதன்மை சார்பு நீதிமன்றம்.நடிகர் இடைவேளை பாபுவுக்கும் முன்ஜாமின் வழங்கியது.

Trending News

Latest News

You May Like