#BREAKING : விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா..!
நடிகர் ஜீவா தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று வந்து கொண்டிருந்தார். அப்போது, காரில் அவர் சாலையின் குறுக்கே வேகமாக வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குறுக்கே ஒருவர் வந்தார்
இதனால், அவர் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக ஜீவா காரை திருப்பினார். அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.
.
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. பரபரப்பு காட்சிகள்#car #jeeva #jeevacar pic.twitter.com/M4Ul1r7gk1
— Thanthi TV (@ThanthiTV) September 11, 2024