#BREAKING : நடிகர் தனுஷுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்..!!
கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் 2004-ம் ஆண்டு, ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்வதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.
இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வேண்டி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு நடந்த திருமணம் செல்லாது என இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.