1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்..!

1

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

பாலாஜி என்ற சொந்த பெயர் கொண்ட இவர், முதல் முறையாக 2000 - 2001 ம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி டிவி சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடிகராக அறிமுகமானார். அதில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.இதையடுத்து டேனியல் என்ற பெயரை தனது பெயருடன் அடைமொழியாக இணைத்துக் கொண்டார்.தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி காலமானார்.

Trending News

Latest News

You May Like