#BREAKING : மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை..!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுகவை சேர்ந்த சில மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம், அதனை வாக்குகளாக மாற்ற களப்பணியாற்ற வேண்டும், சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் என்ற சூளுரைத்துள்ளார்.
திமுக கௌன்சிலர்கள் தவறு செய்தால் பதவிப் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்" என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில், நெல்லையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் திமுக கௌன்சிலர்கள் இரு பிரிவாக நின்றது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.