1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :4 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சி கூட்டணி..!

1

லோக்சபா தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது.. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் மேற்கொண்டு வருகின்றன.

 

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. இதற்காக இந்தியா கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது. எனினும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறினார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்க முடியாது எனவும் திரிணாமூல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்தார்.அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் மோதிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சி இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதியாகியுள்ளது.

டெல்லி, அரியானா, கோவா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கட்சி இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில், சுமூகமாக முடிந்துள்ளதாக காங்., பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். டெல்லி: ஆம் ஆத்மி -4, காங்., - 3, அரியானா: காங்., - 9, ஆம் ஆத்மி -1. குஜராத்: காங்.,-24, ஆம் ஆத்மி -2 இடங்களில் போட்டியிடுகின்றன.

மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி இடங்களில் இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது, வடகிழக்கு, வடமேற்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் ஆகிய இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.


 

Trending News

Latest News

You May Like