#BREAKING : தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர் உயிரிழப்பு!
தவெக மாநாட்டுக்கு சென்னையில் இருந்து வந்த தொண்டர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரன் என்ற அவர், காரில் வந்தபோது சக்கிமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை தவெக மாநாட்டுக்கு சென்ற சென்னையை சேர்ந்த பிரபாகர் என்பவர் சக்கிமங்கலம் அருகே மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கெனவே மாநாட்டு அரங்கில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டு அரங்கில் 40-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)