#BREAKING: சக்திவாய்ந்த நிலநடுக்கம்... அச்சத்தில் உறைந்த பிலிப்பைன்ஸ் மக்கள்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக அறிவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.மணிலாவில் இருந்து வடக்கே 524 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவான நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.