#BREAKING : தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்..!
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று (டிச., 01) போலீஸ் என்கவுன்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷபரீஷ் தெரிவித்துள்ளார்.
ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிரே ஹவுன்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவோயிஸ்டு எதிர்ப்பு படையினர் மற்றும் கிரே ஹவுன்ட்ஸ் போலீசார் இணைந்து வனப்பகுதியில் அதிரடி வேட்டை நடத்தினர். அடர்ந்த காட்டுக்குள் போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனை எதிர்த்து போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.