#BREAKING தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 67 பேர் பலி.. மொத்த உயிரிழப்பு 2,099ஆக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் மேலும் 67பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 50 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,099ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும்4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது.
இதில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வந்த 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
newstm.in