#BREAKING : தலைநகர் டெல்லியில் 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
டில்லியில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டில்லியின் தெற்கு பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ கொகைன் சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட முயன்ற 4 பேரையும் கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திலக் நகர் பகுதியில் 400 கிலோ ஹெராயின் மற்றும் 160 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆப்கனை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.
அதேநாளில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள 1,660 கிராம் கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, லைபீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.