1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை..!

W

கடன்களை வசூலிக்க சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் ஆய்வுக் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்த சட்ட மசோதாவுக்கு, தவாக வேல்முருகன், சிபிஎம் சின்னத்துரை, சிபிஐ தளி ராமசந்திரன், பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் பெற்றவர் தற்கொலைக்கு கடன் வழங்கிய நிறுவனம் காரணமாக இருந்தால் அது குற்றமாக கருதப்படும். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் இல்லாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட முன்வடிவின் முக்கியத்துவம்

அதில், ''தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை இந்த சட்ட திருத்த மசோதா பாதுகாக்கும்.

கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. மீறுபவர்கள் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை

வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளி வர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like