1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திருப்பூரில் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்..!

Q

திருப்பூர் எம்ஜிஆர் நகரில் அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே இடத்தில், தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 42 கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.
42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமான நிலையில், அதிலிருந்த தொழிலாளர்களின் உடைமைகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக எரிந்துகொண்டிருக்கும் வீடுகளுக்குள் இருந்த பொருள்களை மக்கள் வெளியற்றி வருகிறார்கள்.
சாயாதேவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 42 தகரக் கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த நிலையில் இன்று விபத்து நேரிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like