#BREAKING: வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி..!

வெங்காய விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில், ஏற்றுமதிக்கு 40% வரி விதித்தது ஒன்றிய அரசு நடவடிக்கை!
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு, வரும் டிசம்பர் மாதம் வரை இந்த வரி விதிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
வெங்காயத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை உணரும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தடை நுகர்வோருக்கு சாதகமாக இருந்தாலும், விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கிறது.