#BREAKING : 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏடிஜிபி ராஜீவ்குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள சந்தீப்ராய் ரத்தோர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக உள்ள அபய்குமார் சிங் அதே துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டான்ஜெட்கோவில் விஜிலன்ஸ் ஏடிஜிபியாக உள்ள வன்னிய பெருமாள், அதே பிரிவில் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபியாக உள்ள அருண் ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் நியமனம், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஹர்ஷ் சிங் நியமனம், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜவகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்பியாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்பியாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்பியாக சாய் பிரணீத், திருப்பூர் எஸ்பியாக சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.