#BREAKING தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!!
தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுவே தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு.
அவருடன் தொடர்புடைய மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது.
மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக தற்போது அதிகரித்துள்ளது. .
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா, கேரளாவில் தலா 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், குஜராத்தில் 14 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in