1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு..!

Q

இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக,  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. மே 15ஆம் தேதி காலை வரை நாட்டின் 32 விமான நிலையங்களை மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவு "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது.

மூடப்பட்டுள்ள விமான நிலையங்களின் முழு பட்டியல் பின்வருமாறு:

-அடம்பூர்

- அம்பாலா

- அமிர்தசரஸ்

- அவந்திபூர்

- பதிண்டா

- புஜ்

- பிகானேர்

- சண்டிகர்

- ஹல்வாரா

- ஹிண்டன்

- ஜெய்சால்மர்

- ஜம்மு

- ஜாம்நகர்

- ஜோத்பூர்

- காண்ட்லா

- கங்க்ரா (காகல்)

- கேஷோட்

- கிஷன்கர்

- குலு மணாலி (பூந்தர்)

- லே

- லூதியானா

- முந்த்ரா

- நலியா

- பதான்கோட்

- பட்டியாலா

- போர்பந்தர்

- ராஜ்கோட் (ஹிராசர்)

- சரசாவா

- சிம்லா

- ஸ்ரீநகர்

- தோய்ஸ்

- உத்தர்லை

இந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் விமான இயக்கத்திற்காக விமான நிலையங்கள் உடனடியாக திறக்கப்படுவதாக விமான நிலையங்கள் ஆணையம் அறிவிப்பு

பயணிகள் தங்களது விமானத்தின் நிலை குறித்து விமான நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்


 

Trending News

Latest News

You May Like