1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இனி 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை..!

1

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத்தொடங்கியது.

புழக்கத்திற்கு வந்த சில காலங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது.  வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால் அந்த நாணயம் செல்லாதது என்று பெரும்பாலான மக்கள் நம்பி வருகின்றனர். 

இந்நிலையில், 10 ரூபாய் நாணயத்தை வாங்கவில்லை என்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார்.

பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Trending News

Latest News

You May Like