1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது..!!

#BREAKING : 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது..!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதாமல் உள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் பொது தேர்வு எழுதிடும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிகளுக்கு குறைந்தபட்சமாக வருகை புரிந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒரு சில நாட்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தாலே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, ஒரு ஆண்டில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமாவது பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலே பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத வைக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

Trending News

Latest News

You May Like