#BREAKING : மக்களே உஷார்..!! கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு கொரோனா ..!!
2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், கொரோனா தொற்றை எதிர்கொள்ளத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுப்பட்டு பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸில் தாக்கம் காணப்படுகிறது.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,435 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 4,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2-ந்தேதி 3,824 ஆக இருந்தது. மறுநாள் 3,641 ஆகவும், நேற்று 3,038 ஆகவும் குறைந்த நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 26-ந்தேதி நிலவரப்படி 4,129 ஆக இருந்தது. அதன்பிறகு தற்போதுதான் தினசரி பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 1,025 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 711, டெல்லியில் 521, கர்நாடகா, குஜராத்தில் தலா 324, இமாச்சலப்பிரதேசத்தில் 306, தமிழ்நாட்டில் 198, உத்தரபிரதேசத்தில் 179, அரியானாவில் 193, கோவாவில் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முககவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.