#BREAKING : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் பலி..!
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இங்குத் தொழிலாளர்கள் வழக்கம்போல், பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவர்கள்மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இதில், சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 7 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஹுமாயுன் கான் கூறியதாவது: ஆயுதமேந்திய குழுவினர் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள்மீது ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் உயிரிழந்த 20 பேரின் உடல்களை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் வைத்துள்ளோம் என்றார்.