#BREAKING : கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது - 2 பேர் பலி..!!
கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர்.
கடனப்பள்ளியில் நாடகத்தை முடித்து விட்டு சுல்தான் பத்தேரி என்ற இடத்துக்கு கூகுள் மேப் மூலம் பயணம் செய்துள்ளனர். குறுகலான சாலையில் சென்றபோது பேருந்து கவிழ்ந்தது. பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தில் காயங்குளத்தைச் சேர்ந்த அஞ்சலி (32) மற்றும் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்த 9 பேர் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ் மரத்தில் மோதி நின்ற நிலையில் பேருந்து முன்பக்கத்தில் அமர்ந்திருந்த இருவர் பலியாகினர் என கூறினர்.