#BREAKING: சற்றுமுன் நடந்த கோர விபத்து : 17 பேர் பலி..!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தின் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐஸ்வாலில் இருந்து 20 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
40 பேர் வரை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சில இடிபாடுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கின்றனர். மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.