1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: நடிகர் அஜித் தந்தை காலமானார்: .உருக்கமான அஜித்தை அறிக்கை..!!

#BREAKING: நடிகர் அஜித் தந்தை காலமானார்: .உருக்கமான அஜித்தை அறிக்கை..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னை வீட்டில் மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், "நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அஜித்துகுமார் தந்தை மறைவிற்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதிஸ்டாலில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஜித் வேண்டுகோள்:



இதற்கிடையில் நடிகர் அஜித் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும்,அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.

எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என தெரிவத்துள்ளார்.


Trending News

Latest News

You May Like