#BREAKING: வரும் ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - திருமாவளவன் அறிவிப்பு..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்தபோது பேரவையில் இருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார். முறைப்படி சட்டப்பேரவைக்கூட்டம் முடியும் முன்னரே அவையில் இருந்து ஆளுநர் ரவி புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி, வரும் 13ம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.தேசிய கீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறியது அவை மீறல் என திருமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ்முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்.அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். என பதிவிட்டுள்ளார்