#BREAKING:ஓபிஎஸ் தாயார் காலமானார்..!!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரிய குளத்தில் வசித்து வருகிறார். பல ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள், கடந்த மாதம் தேனியிலும், அதற்கு முன் மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்.
நேற்று மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சர்க்கரை அளவு , ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் இன்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்ட நிலையில் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் சற்று முன்பு உயிர் பிரிந்தது.