1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மக்களே உஷார்..! இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை..!

1

தமிழ்நாட்டில் கோடை மழை பரவலாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன், அதாவது மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வியாழக்கிழமை (மே 16) வெளியிட்ட அறிக்கை:கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

Trending News

Latest News

You May Like