1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : கர்நாடக முதல்வரை அறிவித்தது காங்கிரஸ்..!!

#BREAKING : கர்நாடக முதல்வரை அறிவித்தது காங்கிரஸ்..!!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் பதவி தொடர்பாக இழுபறி நீடித்துவந்தது. இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருப்பார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like