1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கிய காங்கிரஸ்!!

#BREAKING ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கிய காங்கிரஸ்!!

கர்நாடகாவில் 120 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தேர்தல் முடிவு வெளியாகி வரும் சூழலில் பாஜகவுக்கு அங்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக இருந்த பாஜகவின் அரக ஞானேந்திரா சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

#BREAKING ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கிய காங்கிரஸ்!!

கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னபட்னா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பின்னடைவில் உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் 120 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் போதுமான நிலையில், காங்கிரஸ் ஆரம்பத்தில் குறைவான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து தற்போது 120 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

#BREAKING ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கிய காங்கிரஸ்!!

பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மற்ற வேட்பாளர்கள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

எனவே, காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை உடனடியாக பெங்களூரு வர கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like