1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!

#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது.


#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!


ஓபிஎஸ் முதலமைச்சராக, நிதியமைச்சகராக பதவி வகித்துள்ளார்; 1977 முதல் கட்சியில் இருக்கிறார். ஓபிஎஸ் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கியது நியாயமற்றது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரட்டை தலைமை முடிவு தன்னிச்சையானது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது.


#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!


பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தோணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூற எந்த புள்ளிவிவரமும் ஆவணமும் இல்லை. அனைத்தும் காகித வடிவிலே உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார்: வழக்கையும் வாபஸ் பெறத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனர்.


#BREAKING அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!!


தொடர்ந்து வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், நடவடிக்கைகள் எடுக்க பொதுக்குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது எனவும் கூறினர்.

வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில்தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதி குமரேஷ் பாபு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like