1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: ஓபிஎஸ்-ஐ சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

#BREAKING: ஓபிஎஸ்-ஐ சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 24-ம் தேதி காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும், இறுதிச்சடங்களில் முதல்வர் சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார்.

#BREAKING: ஓபிஎஸ்-ஐ சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று ஓபிஎஸ்க்கு முதல்வர், உதயநிதி நேரில் ஆறுதல் கூறினார். அப்போது, ஓபிஎஸ்ஸின் குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். மேலும், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

Trending News

Latest News

You May Like