1. Home
  2. சினிமா

#BREAKING: 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் காலமானார்..!!

#BREAKING: 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் காலமானார்..!!

2006 ஆம் ஆண்டு வெளியான 'பட்டியல்' படத்தை தயாரித்தவர் சேகர். இந்தப்படத்தை தயாரித்ததால் இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டு வந்தார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தையாவார். இவரது மகன்கள் விஷ்ணுவர்தன் இயக்குனரகாவும், கிருஷ்ணா நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 63 வயதான பட்டியல் சேகர் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

'பட்டியல்' படம் தவிர கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'கழுகு' மற்றும் அலிபாபா படங்களை தயாரித்துள்ளார் சேகர்.மேலும் இவர் 'ராஜதந்திரம்' படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டியல் சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like