#BREAKING: குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் திடீர் ரத்து..!!
2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
இந்நிலையில் இன்று குடியரசு தலைவர் குன்னூர் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் ககலந்து கொள்ள இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் குடியரசு தலைவர் செல்லும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவையில் இருந்து தனி விமானம் மூலம் பகல் 12 மணிக்கு அவர் டெல்லி புறப்படுகிறார்.