1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நடிகர் சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார்..!

1

தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளராகவும் அறியப்பட்ட இயக்குனர் சேரன்.இவரது மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் ‘வெற்றிக் கொடி கட்டு’ திரைப்படத்துக்கும், 2004 ஆம் ஆண்டில் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார்.84 வயதான பாண்டியன் சினிமா ஆபரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. தனது தந்தை சினிமா ஆபரேட்டராக இருந்ததும் தனக்குள் சினிமா ஆர்வம் ஏற்படக் காரணம் என சேரன் காமதேனு யூடியூப் தளத்தில் கொடுத்திருந்த நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் (84) பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்!

சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பாண்டியன், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நடைபெறுகிறது. 

Trending News

Latest News

You May Like